×

கலால் வரி உயர்த்தப்பட்டதால் மதுபானங்களின் விலை உயர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை 10/- உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி. 750 மி.லி கொள்ளளவுகளில் விறக்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி 500 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

The post கலால் வரி உயர்த்தப்பட்டதால் மதுபானங்களின் விலை உயர்வு: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,CHENNAI ,Tasmac administration ,Dinakaran ,
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!